Friday, June 26, 2009

பிகாபூ!!!!! ஐ ஸீ யூ!!!!

நான்காவது குழந்தை, பிறந்து நான்கு மாதம் கூட முடியாத நிலையில் இறந்தது. அதுவும் எப்படி?? தொட்டிலில் இருந்து கீழே விழுந்து. குழந்தை எப்படி விழுந்திருக்கும்? விழுவதற்கு வாய்ப்பே இல்லை. மனைவிக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. குழந்தை குப்புறப் படுக்க முயன்றிருக்கிறான். அப்போ கீழே விழுந்து தலையில் அடி பட்டு........ ம்ம்ம்ம்ம் என்ன செய்ய முடியும்? மனதைத் தேற்றிக் கொண்டாள். ஆனால் கணவன் மனதிலே நிம்மதி இல்லை. சஞ்சலம் அதிகம் ஆனது. மற்ற மூன்று குழந்தைகளை எப்பாடு பட்டேனும் காப்பாற்ற வேண்டும். என்ன செய்யலாம்??? மனைவியிடம் மீண்டும் பேசிப் பார்த்தான்.

யாரோ பெற்ற குழந்தையை அநாதை ஆசிரமத்தில் சேர்க்கவேண்டும். ஓர் முடிவுக்கு வந்த கணவன், செய்தித் தாளில் விளம்பரம் கொடுத்தான். இம்மாதிரி ஒரு குழந்தை வந்திருக்கு என்றும் அதை வளர்க்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும். உள்ளூர் அநாதை ஆசிரமத்திலும் சென்று அந்தக் குழந்தையைச் சேர்த்துக் கொள்வார்களா எனப் பேசிப் பார்த்தான். மனைவிக்கு விஷயம் தெரிந்து, இருவருக்கும் ஒரே சண்டை. அவர்கள் திருமணாம் ஆகி பத்து வருஷங்களுக்கு மேல் ஆகியும் இருவருக்கும் இன்று வரை எந்த விஷயத்திலும் கருத்து வேற்றுமை வரவில்லை. இன்று, இப்போது, முதல்முதலாய்!! கணவன் மனம் நொந்தது. இரவு படுக்கை அறையில் தங்கள் இருவருடன் தங்கள் நாலாவது மகனும் இருக்கும்போது, இந்தக் குழந்தை இருப்பதைப் பெரிய விஷயமாய்க் கணவன் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இப்போது?? அன்பு மகன் இறந்துவிட்டான். இந்தக் குழந்தையாலேயே என்பதில் அவனுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அப்படி இருக்கையில் அந்தக் குழந்தையைத் தங்களுடன் படுக்க வைப்பதா? கணவன் ஒரு முடிவுக்கு வந்தான். தன்னுடைய படுக்கையை எடுத்துக் கொண்டு லிவிங் ரூம் எனப்படும் இடத்திற்கு வந்து அங்கே உள்ள சோபாவில் படுத்தான். மனைவிக்கு அதிர்ச்சி. என்றாலும் இது எத்தனை நாட்கள் பார்க்கலாம்! என்று எண்ணிக் கொண்டாள்.

தன்னுடைய பாலையே அந்தக் குழந்தைக்குக் கொடுத்து வளர்த்து வந்தாள். குழந்தையும் திருப்தியாய்க் குடித்து நன்கு வளர்ந்து வந்தது. எட்டு வயது ஆகும் இரண்டாம் மகன் அன்று காலையில் இருந்தே லேசாகக் காய்ச்சல் வந்து கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தான். பள்ளிக்கு அனுப்பவில்லை அவனை. மருத்துவரிடம் காட்டி மருந்துகள் வாங்கிக் கொடுக்கப் பட்டு அம்மாவுடனேயே படுக்க வைக்கப் பட்டான். மறுநாள் காலையில் அவன் உயிருடன் இல்லை. காய்ச்சல் என்னமோ அப்படி ஒண்ணும் வீரியம் வாய்ந்தது இல்லை. சாதாரண ஜலதோஷக் காய்ச்சல் தான். பையன் இயல்பாகவே பலவீனம் ஆனவன் என்பதால் படுத்துவிட்டான் என்றும் நாளை சரியாகிவிடுவான் என்றும் மருத்துவர் கூறி இருந்தார். ஆனால்????? பையனுக்குக் கொடுக்கப் பட்ட மருந்துகள் பற்றிக் கணவனுக்குச் சந்தேகம். என்ன இருந்தாலும் சின்னக் குழந்தையால் இன்னொரு குழந்தையை எட்டு வயசுப் பையனை விஷம் வைத்துக் கொல்ல முடியுமா? சந்தேகத்துடனேயே அந்தக் குழந்தையைக் கணவன் பார்க்க அதன் கண்களின் வீரியம் அவனைத் தாக்கியது. அந்தக் கண்கள் சொல்லுவதைச் செய்யவேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் தன்னை அறியாமல் ஏற்பட்டது. ஒரு கணம், ஒரே ஒரு கணம். சுதாரித்துக் கொண்ட கணவன் அந்த அறையை விட்டு ஓட்டமெடுத்தான். இந்தக் குழந்தைதான் அந்தப் பையனை வேறே ஏதோ மருந்துகளைச் சாப்பிட வைத்துச் சாக வைத்திருக்க வேண்டும். அவன் எண்ணம் உறுதிப் பட்டது. அடுத்தடுத்து இரு மகன்களைப் பறி கொடுத்தாச்சு.


சர்ச்சில் இருந்து பாதிரியார் வந்தார். வீட்டை ஏதோ சாத்தான் சுற்றுகிறதா அல்லது விஷ ஆவிகள், சுற்றுகின்றனவா என ஆராய்ந்தார். புனித நீர் தெளிக்கப் பட்டது வீடு பூராவும். கணவன் பாதிரியாரிடம் சொன்னான் அந்தக் குழந்தையைப் பற்றியும், அதன் பார்வையைப் பற்றியும். எப்படிப் பட்ட பார்வை? கண்களால் பேசுகின்றதே! அதுவும் அதன் இஷ்டப் படி எல்லாவற்றையும் செய்யச் சொல்லிக் கட்டளை போடுகின்றதே. வாய் திறந்து பேசாமல் அது சொல்லுவது நமக்குப் புரிகின்றதே? கணவன் அத்தனையையும் பாதிரியாரிடம் சொல்லிக் குழந்தையைப் பார்க்கச் சொல்லுகின்றான். என்ன ஆச்சரியம்? குழந்தை, அசந்து தூங்குகின்றது. எழுப்பப் போனான் கணவன். அங்கே வந்தாள் மனைவி. கணவனைப் பிடித்துத் தள்ளினாள். தூங்கும் குழந்தையை எழுப்ப வேண்டாம் எனவும், கணவனுக்கு இந்தக் குழந்தையிடம் இனம் புரியாத பொறாமை எனவும், அதனால் இவ்வாறெல்லாம் சொல்லுவதாயும், தனக்குக் கொஞ்சம் கூட இந்தக் குழந்தையிடம் சந்தேகம் இல்லை என்றும் சொல்லிக் கொண்டே குழந்தையை எடுத்து அணைத்துக் கொள்ளுகின்றாள். குழந்தை கண் திறந்து பாதிரியாரைப் பார்த்துக் கள்ளமில்லாச் சிரிப்பைச் சிரிக்கின்றது.

கணவன் அசந்து போனான். குழந்தையைப் பெயர் சொல்லிக் கூப்பிடுகின்றான். அது அவன் பக்கம் திரும்பிப் பார்க்கிறது. ஒரு கணம் ஒரே கணம் அவனுக்கும், அந்தக் குழந்தைக்கும் மட்டுமே புரியும்படியான ஒரு பார்வை, அடுத்த கணம் அந்தக் குழந்தை கள்ளமில்லாப் பார்வையை அவன் பக்கமும் காட்டியது. கணவன் திகைத்துப் போனான்.

8 comments:

  1. ம்ம்...அப்போ அந்த குழந்தை பிரச்சனை இல்ல அந்த ஆளோட பார்வையில தான் பிரச்சனையா!?

    ;)

    ReplyDelete
  2. //இந்தக் குழந்தைதான் அந்தப் பையனை வேறே ஏதோ மருந்துகளைச் சாப்பிட வைத்துச் சாக வைத்திருக்க வேண்டும்.//

    அவசரமாப் படிச்சிருக்கீங்க கோபி, நல்லாப் பாருங்க, அந்தக் குழந்தைதான், தன் கண்களால் கட்டளை இட்டு விஷ மாத்திரைகளை அந்தச் சின்னப் பையனைச் சாப்பிடச் செய்தது. பல வருஷங்கள் ஆயிடுச்சு, படிச்சு, கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் கதைக்கரு இதுதான். குழந்தையின் அதுவும் ஒரு வயசுக் குழந்தையின் கோபம் பற்றிக் கேள்விப் பட்டதும் இந்தக் கதை நினைவில் வந்தது.

    ReplyDelete
  3. ஓமன் பார்ட் 1 அண்ட் 2 படிக்கிற மாதிரி இருக்குப்பா. பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

    ReplyDelete
  4. வாங்க வல்லி, எல்லாப் பாகமும் படிச்சாச்சு??? ரொம்பவே வேகம் போங்க! நன்றிப்பா, வந்ததுக்கும், கருத்துக்கும்!

    ReplyDelete
  5. Jenma natchathiram padam partha effectoooooo

    good stuff :)

    ReplyDelete
  6. ஜென்ம நக்ஷத்திரம்??? யார் நடிச்சது?? தொலைக்காட்சியில் வந்தா கட்டாயமாய்ப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  7. //ஓமன் பார்ட் 1 அண்ட் 2 படிக்கிற மாதிரி இருக்குப்பா. //

    அப்படித்தான் எனக்கு தோணித்து!
    :-))

    //பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்//

    ஹிஹிஹி!
    தில்லியிலே ஓமன் படம் பக்கத்து தியேட்டரிலே வந்தது. நானும் நண்பர்களும் போகலாம்ன்னு ப்ளான் பண்ணி கடைசி வரை ஒண்ணா போக முடியலை. கடேசி நாள் ன்னு போர்டும் போட்டுட்டான். நான் பசங்ககிட்டே டேய் நீங்க பாக்க முடியாட்டாலும் கடைசி நாள் நானாவது போறேண்ன்னு சொல்லிட்டு இரண்டாம் ஆட்டம் பாத்து வந்தேன். திரும்பறப்ப ஆள் நடமாட்டமே இல்லாத தெருக்களிலே திரும்பி வரப்பவும் ஒண்ணும் பயமில்லை. வேற சினிமா பாத்துட்டு வந்தவங்க எதிரே பாத்து எங்கே போனே ன்னு விசாரிச்சு ஒரு மாதிரியா பாத்தாங்க. கால் தரையிலேதான்பா இருக்குன்னு சொல்லிட்டு வந்துட்டேன்!
    :-))))

    ReplyDelete
  8. வாங்க திவா, வந்ததுக்கு நன்னியோ நன்னிங்கோ! உங்களை மாதிரி மருத்துவர்களையே அலற அடிச்ச படம்னு கேள்விப் பட்டிருக்கேன் ஓமன் படம் பத்தி, நான் பார்த்ததில்லை, கதையும் படிச்சதில்லை. இந்தக் கதை இங்கிலாந்து கிராமம் ஒன்றில் நடப்பது. ஓமனுக்கு முன்னாலேயே வெளி வந்திருக்குனு நினைக்கிறேன். ஓமன் படத்தில் சொந்தக் குழந்தையே னு சொல்லுவாங்க இல்லை?? இது அப்படி இல்லை, யாரோ பெற்றுப் போட்டுவிட்டுப் போனது!

    ReplyDelete