Sunday, June 14, 2009

ஆடுகின்றானடி தில்லையிலே!


சென்ற வாரம் சிதம்பரம் கோயிலுக்குச் செல்ல நேர்ந்தது. அரசு எடுத்துக் கொண்டதாய்ச் சொல்லப் பட்டதற்குப் பின்னர் அங்கே போகவே முடியாமல் அடுத்தடுத்து வேறே ஏதோ பிரச்னைகள், வேலைகள். கட்டாயமாய்ப் போனவாரம் போக நேர்ந்தது. சென்னையில் இருந்து காரிலேயே போய்விட்டோம். அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகே போட்டிருக்கும் புதிய பாலத்தின் உதவியால் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொள்ளாமல் வீட்டை விட்டுப் பத்தரை மணிக்குக் கிளம்பி மதியம் இரண்டரை மணிக்கெல்லாம் சிதம்பரம் போயாச்சு. வழக்கம் போல் தீக்ஷிதர் வீட்டில் போய் இறங்கி, அங்கிருந்து கோயிலுக்குச் சென்றோம்.

ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு அன்றைக்கு சாயங்கால சாயரக்ஷை வழிபாடும், அபிஷேகமும் எங்கள் கட்டளை. காலையில் இரண்டாம் காலமும், சாயரக்ஷையும் பைரவர் அபிஷேகம் நடக்கும். நாங்க மாலை அபிஷேஹத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். கோயிலில் வழக்கம்போல் பார்ப்பதற்குத் தெரிந்தாலும் உள்ளே நுழையும் போது தீக்ஷிதர்களால் நிர்வகிக்கப் பட்டு வந்த ப்ரசாத ஸ்டாலைக் காணோம். உண்டியலை எங்கே வச்சிருக்காங்கனு தேடினேன். பார்க்க முடியலை. கூட்டம் மட்டுமில்லாமல் கூட வந்த என்னோட பெண்ணுக்கு அதிகம் அலைய முடியாததால் சுத்திப் பார்க்க முடியலை. நாங்க இரண்டு பேர் மட்டும் போனால் சிவகாமசுந்தரி, பாண்டிய நாயகர் என அனைவரையும் பார்த்துக் குசலம் விசாரிப்போம். அன்னிக்கு அது முடியலை. கனகசபைக்கு ஏறிப் போய் நடராஜரையும், ரகசியத்தையும் தரிசனம் செய்து கொண்டோம்.

கனகசபைக்கு வெளியே உள்ள பிரஹாரத்தைச் சுற்றி வரும்போது ஓர் இடத்தில் நடராஜருக்கு வலப்பக்கமாய் உள்ள படிக்கட்டிற்கு எதிரே ஆறுமுகசாமி உட்கார்ந்து கொண்டு சிலரோடு பேசிக் கொண்டிருந்தார். சாயரக்ஷை வழிபாட்டின் போது தேவாரம் பாட வந்திருப்பதாய்த் தெரிய வந்தது. எங்கள் கட்டளை அபிஷேகம் முடிந்து சாயரக்ஷை வழிபாடு தொடங்கியதும் கனகசபைக்குச் சிலருடன் வந்து கையில் வைத்திருந்த புத்தகம்/பேப்பர்??? சரியாத் தெரியலை, அதைப் பார்த்து தேவாரத்தைப் படித்தார். யாரோடதுனு புரியலை. அவர் படிச்சுட்டுக் கீழே இறங்கித் தன்னுடைய இடத்திற்குப் போய்விட்டார். அதுக்கு அப்புறமாய் தீக்ஷிதர்கள் வழிபாடு தொடங்கி தீப ஆராதனை செய்தனர். கடைசி ஆராதனை செய்யும் முன்னர் மணி அடித்துக் கொண்டிருந்த, தருமபுரம் ஆதினத்தால் நிரந்தரமாய் நியமிக்கப் பட்டிருக்கும் ஓதுவார் ஒருவரும், ஓதுவார் பெண்மணி ஒருவரும் மாணிக்கவாசகரின் திருச்சாழலில் இருந்து சில பதிகங்கள் பாட, பின்னர் கற்பூர ஆரத்தி காட்டப் பட்டது.

கூட்டத்தில் அனைவரும் தங்கள் இஷ்டத்துக்குக் கையில் ஜால்ரா, சிறு மேளம், போன்றவற்றை வழக்கம்போல் எடுத்து வந்து அந்த மணியின் ஓசைக்கு ஏற்ப சிலர் ஆடிக் கொண்டும், சிலர் தேவார, திருவாசகங்களைப் பாடிக் கொண்டும் நடராஜர் தரிசனத்தை அனுபவித்தது கண்கொள்ளாக் காக்ஷியாக இருந்தது. இந்தக் கோயிலில் தமிழ் முழங்கவில்லை, தமிழில் பாடத் தடை என்று சொல்லுவது அனைத்தும் உண்மை அல்ல என்பதும் மீண்டும் வெட்ட வெளிச்சமாகத் தெரிய வந்தது. :((((((((((

ஆடுகின்றானடி தில்லையிலே
அதைக் காண வந்தேன் அவன் எல்லையிலே
திங்களுமாட, கங்கையுமாட,

அவன் பாட்டுக்கு ஆடிக் கொண்டு இருக்கின்றான். அவன் தான் இதை அனைவருக்கும் உணர்த்த வேண்டும். வேறே என்ன சொல்ல முடியும்???

9 comments:

  1. எவன் சொன்னது தில்லையில் தேவாரம் திருவாசகம் இல்லைன்னு!

    சும்மா அரசியல் பண்ணிகிட்டு இருக்காங்க. ஏன் எனக்கு சொல்லாம போனீங்க கீதாம்மா?

    ReplyDelete
  2. அபி அப்பா, உங்க உடம்பு சரியாகட்டும், மாயவரமே வரோம். :)))))))))

    ReplyDelete
  3. இப்போத் தான் கவனிச்சேன். இது ஐம்பதாவது பதிவுங்கறதை. சிதம்பரம் பத்திய பதிவாய் வந்ததில் சந்தோஷமாயும் இருக்கு.

    ReplyDelete
  4. அதானே நட்டுவை விட்டுக் கொடுப்பாரா அபி அப்பா.:)

    சிதம்பரம் போனால் உங்களுடன் தான் போக வேண்டும் கீதா.
    எல்லாத் தரிசனக்களையும் சரியாக விளக்கிச் சொல்லுவீர்கள்.

    ஸ்வர்ணாகரண பைரவர் என்ற வழிபாடு எதற்காக என்று விளக்கி ஒரு கட்டுரை எழுங்களேன் மா. எனக்கு அறிய ஆசையாய் இருக்கிறது.

    ReplyDelete
  5. வாங்க வல்லி, இந்தப் பக்கமும் தேடிப் பிடிச்சு வந்துட்டீங்க, நல்வரவும், நன்றியும்.

    ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் பத்தி சிதம்பர ரகசியத்திலே எழுதி இருக்கேன். அதைத் தேடி எடுத்து மீள் பதிவாய்ப் போடறேன். நன்றிம்மா.

    ReplyDelete
  6. ஆகா....50வது பதிவா!!! ;))

    கலக்குறிங்க தலைவி...வாழ்த்துக்கள் ;)

    இன்னும் கொஞ்சம் சேர்த்து எழுதியிருக்கலாம்...

    \\ஆடுகின்றானடி தில்லையிலே
    அதைக் காண வந்தேன் அவன் எல்லையிலே
    திங்களுமாட, கங்கையுமாட,\\\

    தலைவி இது என்ன முன்று வரிகள் தானா...மீதி இருந்தால் பதிவாக போடுங்கால்...நன்றாக இருக்கு அந்த பாட்டு ;)

    ReplyDelete
  7. வாங்க கோபி, இது ஐம்பதாவது பதிவு. பாடல் முழுசும் எழுதறேன். கொஞ்சம் பொறுத்துக்குங்க. ரொம்பவே பிரபலமான பாட்டு இது.

    ReplyDelete
  8. யாரென்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமேன்னு பாடலாம் போல இருக்கே?. விடுங்க கீதாம்மா...

    ReplyDelete
  9. வாங்க மெளலி, நேரம் கிடைச்சு வந்ததுக்கு முதல்லே சந்தோஷம், உண்மையைச் சொல்லறதுக்குக் கூட அஞ்சாநெஞ்சம் வேணுமா??? :(((((((

    ReplyDelete