Tuesday, January 20, 2009

கண்டு பிடிங்க அம்பி!

நானும் பயணக்கட்டுரையைத் தொடரணும்னு தான் நினைக்கிறேன். ஆனால் இந்தத் தொண்டரடிப் பொடிங்க விட்டால் தானே? ஏற்கெனவே என்னோட மொக்கைகளுக்கே ஆதரவுனு சொல்லிட்டு எல்லாம் போய்ப் பதுங்கிட்டாங்க! இப்போ நேயர் விருப்பத்தை நிறைவேற்றலைனா அப்புறம் தலைவி பதவிக்கே கோவிந்தாவாயிடுமே! பதவி சுகத்தை அனுபவிச்சுட்டு விட்டுக் கொடுக்க முடியுமா?? அதுவும் இப்போக் கொஞ்ச நாளா உ.பி.ச.வும் இல்லாமல் தனியாப் போராட வேண்டிப் போச்சு! போன பதிவிலே அம்பியோட திடீர் தொலைபேசி அழைப்பைப் பத்திச் சொன்னேனா? மறு நாளே பாருங்க, யார் கூப்பிட்டிருப்பாங்கனு நினைக்கிறீங்க? கடைசியிலே வரும் அது! ஆனால் பேசி முடிக்கும்போது சொன்னார் பாருங்க ஒரு பஞ்ச் டயலாக்! அப்போ உடனேயே இதைக் கட்டாயமாப் பதியணும்னு முடிவு பண்ணிட்டேன். அது என்னனு கேட்கிறவங்க, கொஞ்சம் பொறுங்க!

பொங்கல் அன்னிக்கு மத்தியானமா, ஆற்காட்டாரின் திடீர் வரவினால் சும்ம்ம்ம்மா உட்காரவேண்டி இருந்தது. புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு, எதைப் படிக்கலாம் என ஒரு சிறு பாட்டி மன்றம், சீச்சீ, பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருந்தேன். மனசுக்குள்ளே என்னமோ தொலைக்காட்சிக்கே ஓட்டு விழ, தொலைக்காட்சி பார்க்கலாமா? நமீதாவும், நவ்யா நாயரும் கொண்டாடும் பொங்க"ளை"ப் பார்க்கணுமேனு அலுப்பாவும் இருந்தது. காமெடி திரையில் வழக்கம்போல் அறுவைகளே. திடீர்னு தொலைபேசி ஒலிக்க எடுத்துப் பேசினால், பேசினவரும், அம்பியைப் பத்தி நான் எழுதின பதிவைப் படிச்சுட்டுப் பேச எண்ணி இருக்கார். யாருனு சொல்லலை. ஆனால் எனக்குப் புரிஞ்சுது யாருனு. அவரோ என்னமோ எனக்குப் புரியாதபோல் பேசறார். சரினு நானும் காட்டிக்கவே இல்லை. என்ன திடீர்னு கேட்டதுக்கு ரங்கமன்னாரைப் படிச்சேன்னு பதில் வந்தது. அப்புறமா அவருக்கு சந்தேகம் தான் யாருனு எனக்குத் தெரியுதானு? நான் யாருனு புரிஞ்சுட்டுத் தான் பேசறீங்களானு கேட்டாரே ஒரு கேள்வி! ஆப்பீச்சு வேலையிலே இப்படிக் கூப்பிடறது, வேறே யாராய் இருக்கப் போகுதுனு நானும் உடனேயே பதில் சொல்லவும், மனுஷனுக்கு இப்போத் தான் சந்தேகம் தீர்ந்தது.

அப்புறமா அவங்க வீட்டில் வளர்க்கும் பாம்புகள், தவளைகள், எலிகள், பூனைகள் என அவர் ஆரம்பிச்சு உதார் விட, நாம என்ன சளைத்தவங்களா?? இதோ பார்சல் அனுப்பறேன்னு சொன்னதும் கொஞ்சம் நிறுத்திக்கிட்டார். அப்புறமா அபி அப்பா, உங்களைப் பத்தியும் ரொம்ப விசாரிச்சார். சொன்னேன், உங்களைப் பத்தியும். அவரோட குழந்தையைப் பத்தியும், அவளைத் தாலாட்டுப் பாடித் தூங்க வைக்கிறதையும் பத்தியும் சொன்னார். ரொம்ப சந்தோஷமா இருந்தது இந்தப் பகுதி தான். :)))))))) அதுக்கப்புறம் தான் வந்துச்சு பாருங்க பஞ்ச் டயலாக். என்னங்க இன்னிக்கு இவ்வளவு நேரம் பேசறீங்கனு கேட்டேனா?? என்ன சொன்னார் தெரியுமா? "மேடம், நான் என்ன அம்பினு நினைச்சீங்களா? மாமனார் தொலைபேசியிலே பேசறதுக்கு? இது என்னோட சொந்த தொலைபேசிங்க! அதிலே இருந்து தான் பேசறேன்"னு சொன்னாரே பார்ப்போம்! யாருனு கண்டு பிடிச்சுச் சொல்லவேண்டியது அம்பியோட வேலை. நான் சொல்லப் போறதே இல்லை. என்னோட வேலை கடைசி பஞ்ச் டயலாக் எழுதறதுக்காகப் பதிவு எழுதினது மட்டுமே! கண்டு பிடிங்க அம்பி! அப்பாடா, தலைப்பு என்ன வைக்கிறதுனு மண்டை காய்ஞ்சுட்டு இருந்தது. கண்டு பிடிச்சுட்டேன்.

அர்ச்சனா அப்பா, ஒரு வாரம் ஆனாலும் உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேத்திட்டேன். நாராயணா! நாராயணா!

9 comments:

  1. //அர்ச்சனா அப்பா, ஒரு வாரம் ஆனாலும் உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேத்திட்டேன். நாராயணா! நாராயணா! //

    yaara irukkum ennai paththi visarichathu? ambi! konjam help pannungka! oru veeLa mouliya irukkumo?

    ReplyDelete
  2. //அர்ச்சனா அப்பா, //


    எங்கள் தல கைபுள்ளையை வம்புக்கு இழுப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். :))


    அவர் வேணா பிராஜக்ட்ட முடிச்சிட்டு சொல்லாம கொள்ளாம சென்னைக்கு போயிருக்கலாம். ஆனா என்னிக்கும் எங்கள் இதயத்தில் வாழ்கிறார் எங்கள் தல. :)))

    ReplyDelete
  3. கீதா பாட்டி, எதுக்கு இந்த நாரதர் நாயுடு வேலை? அவரு அப்படி எல்லாம் சொல்லி இருக்க மாட்டாரு.

    ReplyDelete
  4. நாராயணா! நாராயணா!

    ReplyDelete
  5. ம.கா வை தவிர்த்ததுக்கு நன்னி அம்பி.:-))
    - ரெங்க திவா

    ReplyDelete